அக்குபங்சர் பட்டய படிப்பு முடித்து தேர்வு எழுதிய மாணவர்கள்

GALLERY

6/20/2025

மருந்து மாத்திரைகள் இல்லாமல் ஒரு நோயை முழுமையாக சரி செய்யக்கூடிய மருத்துவமாக விளங்கி வரும் அக்குபங்சர் மருத்துவம் இன்று மக்களிடையே மெல்ல பரவலாக சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மருத்துவத்தில் மருந்து மாத்திரைகளோ ஊசிகளோ அல்லது மருத்துவ பரிசோதனைகளோ இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் எளிய மக்கள் கூட இந்த மருத்துவத்தைக் கற்று , தங்களது குடும்பத்தினருக்கும் , நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

தற்போதைய சூழலில் இந்த மருத்துவத்தை படிப்பதற்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய சில பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக கண்காணிப்பு குழுவின் வழிகாட்டல் நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு ஆண்டு பட்டய படிப்பு வழங்கி வருகிறது.

அதில் தற்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது பாரதியார் பல்கலைக்கழகம்.

திருப்பூர் Syedia Community College , பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் ஓராண்டு அக்குபங்சர் பட்டய படிப்பு முடித்து தேர்வு எழுதிய மாணவர்கள். பதினாறாம் தேதி தொடங்கிய தேர்வு 19ஆம் தேதி வரை நடைபெற்றது. கலந்து கொண்டு தேர்வு எழுதி அனைத்து மாணவர்களுக்கும் Healthy and Happy Life Solutions -ன் வாழ்த்துகள்.