ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது ஒரு மகிழ்ச்சியை நோக்கி நகர வேண்டும் என்பதுதான் நம் எல்லோரின் விருப்பமும். மகிழ்ச்சியை நோக்கி நகர்வதற்காகத் தான் பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்று படிக்கிறோம்.
பெரிய வேலையில் சேர வேண்டும், அதுதான் மகிழ்ச்சி என்று அதற்காக ஓடுகிறோம். மாதா மாதம் பெரிய சம்பளம் கைகளுக்கு வந்துவிட்டால் மகிழ்ச்சி என்று அதை நோக்கி ஓடுகிறோம். ஒரு பெரிய வீடு இருந்து விட்டால் அதுதான் மகிழ்ச்சி என்று அதை நோக்கி ஓடுகிறோம். கடன் வாங்கி ஒரு பெரிய வீட்டையும் கட்டி விடுகிறோம். பெரிய வீட்டில் நல்ல விலை உயர்ந்த கார் இருந்தால் மகிழ்ச்சி என்று நினைத்து பெரிய காரை வாங்குகிறோம். அதற்கும் கடன் வாங்கி விடுகிறோம். அந்த வீடு நிறைய அலங்கார பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் இருப்பது மகிழ்ச்சி என்று நிறைய பொருட்களை வாங்கிக் குவிக்கிறோம். இவை அனைத்தையும் வைத்துக்கொண்டு திருமணம் செய்வது மகிழ்ச்சி என்று நினைத்து திருமணம் செய்கிறோம். அதன் பிறகு குழந்தைகள், அதன் பிறகு குழந்தைகளின் கல்வி என்று ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதில் மகிழ்ச்சி எங்கே இருக்கிறது என்று பார்த்தால் எங்குமே இல்லை. மாறாக அனைவரிடமும் மன அழுத்தம் என்ற ஒன்று மட்டுமே இருக்கிறது. மகிழ்ச்சி என்று எதை நோக்கி நாம் ஓடினோமோ அது நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. மாறாக அழுத்தத்தையே கொடுத்தது. நாம் ஓடிய ஓட்டமும் , மன அழுத்தமும் உடலில் அழுத்தமும் உடலில் நோயாகவும் மாறி நிற்கிறது. மன அழுத்தம் மற்றும் உடல் அழுத்தம் இரண்டிலிருந்தும் ஒரு மனிதன் விடுபட்டு மகிழ்ச்சியாகவும் அதேசமயம் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.




கு. நா. மோகன்ராஜ்
மரபுவழி தொடுசிகிச்சையாளர். Founder of Happy & Healthy Life Solutions
1976 ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி சேலத்தில் பிறந்த இவர், அடிப்படையில் Diploma in Electric & Electronics Engineering முடித்தவர். திருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்கு தேவையான இயந்திரங்களை வெளிநாட்டிலிருந்து விற்பனை செய்யும் நிறுவனத்தில், அந்த இயந்திரங்களை நிறுவுவதும் மற்றும் அதில் ஏற்படும் பழுதுகளை சரி செய்வதுமாக இருந்த இவருக்கு 29ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு கொடிய நோயின் தாக்கத்தினால் நவீன மருத்துவம் கைவிட்ட காரணத்தினால் மரபு மருத்துவங்களை நாடி ஓடிய பொழுது அவருக்கு கை கொடுத்த அக்குபங்சர் மருத்துவத்தைக்கு படித்து அதையே தொழிலாகவும் கொண்டவர். ஒரு குடும்பத்தில் மருத்துவ செலவு என்பது இல்லாமல் இருப்பதற்கான வாழ்வியலையும் கற்றுக் கொடுத்து வருகிறார்.
