மழையினைக் கொண்டாடுவோம்

BLOG

11/6/2025

ஒவ்வொரு பருவம் மாறும்போதும்,

அந்தந்த பருவத்திற்கு தகுந்தபடி நம் உடல் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.

அதனால்தான், பருவம் மாறும் போது பலருக்கு

காய்ச்சல், சளி, இருமல், வாந்தி அல்லது பேதி போன்றவை ஏற்படுவது மிகவும் இயல்பு.

மழையில் நனைந்தால் காய்ச்சல், சளி, இருமல் வரும் — அதனால் நனையக் கூடாது

என்று ஒரு தவறான கருத்து மக்கள் மனதில் பரப்பப்பட்டுள்ளது.

இது மிகவும் தவறான ஒன்று.

மழையில் நனைவது என்பது உடலின் கழிவுகளை நீக்கி,

உடலை சுத்தப்படுத்தி, ஆரோக்கியம் அடைவதற்கான இயற்கையான வழி என்பதே உண்மை.

மழை என்பது நோயை உண்டாக்குவதற்கான காரணம் அல்ல;

மாறாக, உடலை சுத்தமாக்கி உயிர் ஆற்றலை ஊட்டும் இயற்கை மருந்து ஆகும்.

மழை வந்தால், காற்று, நீர், வெப்பம் அனைத்தும் மாறுகின்றன.

அதேபோல், நம் உடலும் தன்னை இயற்கையுடன் ஒத்திசைக்க முயல்கிறது.

அந்த மாற்றத்தை மருந்து மாத்திரைகளை கொண்டு தடுக்காமல்,

இயற்கையை நம்பி அமைதியாக அனுபவித்தால் —

உடல் தானாகவே புதிய சக்தியுடன் எழுந்திருக்கும்.

உண்மையில், உயிராற்றல் அதிகம் கொண்டதுடன் சுத்தமான நீராக இருப்பது மழைநீரே.

வானில் உருவாகி, மண்ணில் விழும் அந்தத் துளிகள் —

மனிதனுக்கான இயற்கையின் பரிசு.

மழை நீர் படும் இடங்களில் எல்லாமே புதிய உயிர்களின் பரிணாமம் நிகழ்கிறது.

மழைநீர் படும் இடங்களில் புதிய செடிகள், புல்கள் முளைத்து,

அவை பச்சை பசியாக காட்சியளிப்பதும்,

அங்கிருக்கும் மரங்கள் அனைத்தும் புத்துணர்வோடு திகழ்வதும் கண்கூடாகத் தெரிகிறது.

அதுபோலவே, மனித உடலிலும் மழை ஒரு நல்ல மாற்றத்தையே உண்டாக்குகிறது.

மழையில் நனையும் ஒருவரின் உடலில், ஏற்கனவே தேங்கியுள்ள கழிவுகள் இருந்தால்,

அவற்றை வெளியேற்றும் இயற்கைச் செயல் நடக்கிறது.

இது மழைநீரில் நிறைந்திருக்கும் ஆற்றல் மூலமாகவே நடக்கிறது.

மழையில் நனையும் ஒருவருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்றவை ஏற்பட்டால்,

அது அவருடைய உடலில் தேங்கியிருந்த கழிவுகளை மழைநீரின் ஆற்றல் வெளியேற்றுகிறது என்பதற்கான சான்றாகும்.

மாறாக, மழையில் நனைந்தும் எந்தக் காய்ச்சலும், சளியும், இருமலும் ஏற்படவில்லை என்றால்,

அவர் உடலில் கழிவுகள் எதுவும் இல்லை — உடல் முழுமையாகச் சுத்தமடைந்துள்ளது என்பதற்கான அடையாளம் அது.

மழையில் எப்படி நனைவது?

மழையில் நனையும் விதமும் ஒரு கலைதான்.

சிறிது கவனத்துடன் நனைந்தால் அது மருந்தாக மாறும்.

1. மழை பெய்யத் தொடங்கும் போது உடனே நனைக்க வேண்டாம்.

ஆரம்பத்தில் பெய்யும் மழை நீரில் காற்றில் இருந்த தூசு, புகை, இரசாயனக் கழிவுகள் கலந்து இருக்கும்.

2. மழை தொடங்கி பத்து நிமிடங்கள் கழித்து நனைவது சிறப்பு.

அந்த நேரத்திற்குள் காற்றில் இருந்த தூசுக்கள் அனைத்தும் மண்ணில் அடங்கி விடும்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு விழும் மழைநீர் தான் உண்மையில் சுத்தமானதும் உயிராற்றல் நிறைந்ததும் ஆகும்.

3. மழையில் நனைவதற்கும் ஒரு அளவுகோல் உண்டு.

மழையில் நனைந்தபோது உடலில் குளிர்ச்சி ஏற்படுவதும், வெப்பநிலை குறைவதும் இயல்பு.

ஆனால், குளிர் தாக்கி நடுங்கத் தொடங்கினால், உடல் “போதும்” என்று சைகை செய்கிறது.

அப்போது உடனே மழையில் நனைவதை நிறுத்தி, உடலை உலர்த்திக் கொள்ள வேண்டும்.

4. நனைந்துவிட்ட பிறகு உடனே துடைத்து விடாதீர்கள்.

மழைத்துளிகள் தோலைத் தொடும் அந்த நொடிகளில் உடல் இயற்கையின் ஆற்றலை உறிஞ்சிக் கொண்டிருக்கும்.

சில நிமிடங்கள் அந்தத் துளிகளைத் தோலில் தங்க விடுங்கள்;

அவை நரம்புகளுக்கு உயிர் ஊட்டும்.

பின்னர் மெதுவாகத் துடைத்து உலர்த்திக் கொள்ளுங்கள்.

5. மழையில் நனைந்து வந்த பிறகு சூடாக எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

உடலில் இயற்கையாக உருவாகும் அந்தக் குளிர் சமநிலையை உடனே மாற்றி விடாதீர்கள்.

அந்த சமநிலைதான் உடல் புதுப்பிக்கப் பெறும் ஆற்றலின் ஒரு பகுதி.

சில நேரம் இயற்கையாகச் சாந்தமாக இருக்கட்டும்; பின்னர் உடல் தானாகவே தன்னை சரிசெய்துகொள்ளும்.

இயற்கையே மழையைப் பயன்படுத்தி உயிர்களுக்கு புதிய பிறப்பை அளிக்கிறது.

அதேபோல், நாமும் அந்த மழையில் நனைந்து, நம் உயிர்க்கும் புத்துணர்ச்சி தரலாம்.

அதுவே மழையின் அர்த்தம் —

புதுப்பித்தல், சுத்திகரிப்பு, மீள்பிறப்பு.

மழையினைக் கொண்டாடுவோம்!

கு.நா. மோகன்ராஜ்

மரபு வழி தொடு சிகிச்சையாளர்

Founder of Happy and Healthy Life Solutions