குணப்படுத்தும் பெயரில் கொன்ற இருமல் மருந்து!

BLOG

10/7/2025

நாம் வாழ்வில் எந்த நிலையிலும் மருந்து மாத்திரைகளின் அடிமையாகக் கூடாது என்பதைக் காலங்காலமாக நம் முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, நவீன மருத்துவம் பரிந்துரைக்கும் ரசாயன கலந்த மாத்திரைகள் உடலுக்கு நஞ்சு என்பதும், அவை நம் இயற்கைச் சுகாதாரத்தை அழிப்பதும் மறுக்க முடியாத உண்மை.

சிறிய காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், வாந்தி, பேதி, மயக்கம் போன்ற அன்றாட தொந்தரவுகளுக்குக் கூட நம்மூரில் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று, ஆயிரம் ரூபாயிலிருந்து சில லட்சங்கள் வரை செலவு செய்வது வழக்கமாகி விட்டது.

ஆனால் அதே நேரத்தில், வளர்ந்த நாடுகள் எனக் கருதப்படும் மேலை நாடுகளில் மேலே குறிப்பிட்ட இத்தகைய சிறிய தொந்தரவுகளுக்காக மருத்துவர்களை சந்திப்பதற்கே அனுமதி கிடையாது என்பதை எத்தனை பேருக்குத் தெரியும்?

ஏனெனில் அங்கு மிகத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது:

இந்த சிறிய தொந்தரவுகளுக்கு ரசாயன மருந்துகள் உட்கொள்வது உயிருக்கு ஆபத்தாகவோ அல்லது நீண்ட காலத்தில் ஒரு பெரிய நோயை உருவாக்கக் கூடும்.

அதனால்தான் மேலை நாடுகளில் மருத்துவர்கள் இந்தத் தொந்தரவுகளுக்காக மருந்து மாத்திரைகளை பரிந்துரைப்பதில்லை. அதற்குப் பதிலாக, சில நாட்கள் ஓய்வு எடுத்து உடல் தானாகக் குணமடைய அனுமதியுங்கள் என்பதே அவர்களது வழக்கம்.

ஆனால் நம்மூர் மருத்துவர்கள் காய்ச்சல், சளி, இருமல், வாந்தி, பேதி போன்றவைகளுக்கு தொடர்ந்து கொடுத்து வரும் மருந்துகளே பல பெரிய நோய்களை உண்டாக்குகிறது அல்லது உயிரையே போக்குகிறது என்பதற்கான ஒரு சாட்சி இதுவே.

சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் நடந்த சம்பவம் இதற்கு ஆதாரமாக உள்ளது. அங்கே ஒரு இருமல் மருந்து கொடுக்கப்பட்டதில், ஒன்பது குழந்தைகள் உயிரிழந்தது மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மேலும், அந்த மருந்து பாதுகாப்பானது என்று நிரூபிக்க அதையே சாப்பிட்ட இரு மருத்துவர்களுக்கே மயக்கம் ஏற்பட்டது.

நல்ல வேலையாக தற்போது அந்த மருந்துக்கு தடை விதித்து இருக்கிறது நமது அரசாங்கம்.

அதே சமயம் சளி இருமலுக்கு சிறப்புகள் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவும் ஏற்கனவே நடைமுறையில் இருந்தே இருக்கிறது.

இங்கே ஒரு கேள்வி எழுகிறது சாதாரண மக்களிடம் இருந்து.

“இந்த மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், அங்கு பணி புரியும் சயின்டிஸ்ட்கள், அவர்களுக்கு இந்த கேடு தெரியாததா?”

நவீன மருத்துவ ஆர்வலர்கள் உடனே பதில் தருவார்கள்:

“பலதரப்பட்ட பரிசோதனைகளுக்குப் பிறகே மருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன” என்று.

ஆனால் உண்மை என்ன?

பல சோதனைகளைக் கடந்து வந்ததாகக் கூறப்படும் அந்த மருந்துகள் கூட உயிரைப் பறிக்கின்றன, பத்து பக்க விளைவுகளையும் உருவாக்குகின்றன.

இதில் எதை அறிவியல் பூர்வமாக நிரூபித்தார்கள்? ஒரு பக்கம் “அறிவியல்” என்று சொல்லி ரசாயனங்களை மனித உடலுக்குள் திணிக்கிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் அந்த மருந்துகளே மனிதர்களை அழித்து விடுகின்றன.

மீண்டும் சொல்கிறேன்:

இயற்கையோடு இணைந்து, மருந்து மாத்திரைகள் இல்லாத வாழ்க்கையே உண்மையான அறிவியல் பூர்வமான வாழ்க்கை.

அறிவியல் என்பது மனிதனை மருந்துகளின் அடிமையாக்குவதல்ல. அறிவியல் என்பது உடலின் இயற்கை குணமடைவு சக்தியைப் புரிந்து அதற்கேற்ப வாழ்வது.

கு.நா. மோகன்ராஜ்

மரபு வழி தொடு சிகிச்சையாளர்

Founder of Happy and Healthy Life Solutions