மைக்கேல் ஜாக்சன் – மரணத்தைக் கூட வெல்ல முயன்ற மனிதன்!

150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற கனவு

BLOG

9/25/2025

“இசையுலகின் முடிசூடா மன்னன்” என்று அழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சன், 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்பதே அவரது கனவு.

அதற்காக அவர் எடுத்த முன்னேற்பாடுகள் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் வாழ்க்கை

தலைமுடி முதல் கால் விரல் நகம் வரை தினமும் பரிசோதிக்க பன்னிரண்டு சிறப்பு மருத்துவர்கள் அவரது இல்லத்தில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

தினசரி உணவுகள் கூட ஆய்வக பரிசோதனையில் சோதிக்கப்பட்ட பின்னரே அவரது மேசையை அடையும்.

நம்முடைய நாடுகளில் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் பூச்சிக்கொல்லி மற்றும் பல்வேறு ரசாயனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையில், அமெரிக்கா போன்ற நாடுகளில் அதற்குக் கடுமையான சட்டங்கள் உள்ளன.

அப்படிப்பட்ட கட்டுப்பாடு உள்ள நாட்டில்கூட, உணவைக் கூட ஆய்வகத்தில் பரிசோதித்த பிறகே சாப்பிட்டார் மைக்கேல் ஜாக்சன்.

படுக்கையறையில் தூய்மையான ஆக்சிஜன் சீராக சுழல சிறப்பு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அவருக்காக உடல் உறுப்புகளை தானம் செய்யத் தயாரான நன்கொடையாளர்கள் குழுவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் எப்போதும் தயாராக இருந்தது.

ஒரு அடியோ, ஒரு செயல் கூட மருத்துவ ஆலோசனையின்றி அவர் செய்வதில்லை.

இதயத்தின் சுதந்திரம் பறிக்கப்பட்டது

இத்தனை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தும் கூட, அவரால் 50 ஆண்டுகள் கடப்பதே சிரமமாக இருந்தது.

ஏனெனில், ஒருவரின் இதயம் இயற்கையான சுதந்திரத்தோடு துடிக்க வேண்டும்.

ஆனால் மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிமையாக வாழும் போது —

மனதிற்கு பிடித்த உணவுகளை சாப்பிட முடியாது,

மனதிற்கு பிடித்தபடி வெளியில் செல்ல முடியாது.

அவரது வாழ்க்கை முழுவதும் “இதை சாப்பிடாதீர்கள்… இதை மட்டும் சாப்பிடுங்கள்… இந்த மாத்திரை கட்டாயம் உட்கொள்ளுங்கள்…” என்ற கட்டுப்பாடுகளில் சிக்கி விட்டது.

உண்மையில், அந்த மருத்துவரின் ஆலோசனைகள், அவர்கள் பரிந்துரைத்த பரிசோதனைகள், அவர்கள் கட்டாயப்படுத்திய உணவுகள், அவர்கள் கொடுத்த மாத்திரைகள் — இவை எதுவும் இல்லாமல் இருந்திருந்தால் கூட, அவர் சற்றேனும் இயல்பாக, இன்னும் சிறிது காலம் ஆரோக்கியமாக வாழ்ந்திருப்பார் என்பதே நிதர்சனம்.

எதிர்பாராத முடிவு

ஆனால்…

2009 ஜூன் 25.

வயது 50.

அந்த நாளில் திடீரென அவரது இதயம் செயலிழந்தது.

பன்னிரண்டு மருத்துவர்களின் முயற்சியும் பலிக்கவில்லை. லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து விரைந்து வந்த நிபுணர்களின் உதவியும் பயனில்லாமல் போனது.

இறுதியில் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் அவர் உயிரிழந்தார்.

அவரது கடைசி நிகழ்ச்சி உலகம் முழுவதும் 2.5 மில்லியன் மக்களால் நேரலையில் பார்க்கப்பட்டது. ஆனால் அது இசை நிகழ்ச்சி அல்ல… அவருக்கான இறுதி பிரியாவிடை.

மைக்கேல் ஜாக்சன் மரணத்தை வெல்ல நினைத்தார்.

ஆனால் இறுதியில், மரணமே அவரது இதயத்துக்குச் சவால் விட்டது.

நமக்குக் கிடைக்கும் பாடம்

மைக்கேல் ஜாக்சனின் கதை நமக்குக் கொடுக்கும் மிகப்பெரிய பாடம் –

“நவீன மருத்துவம்” என்று பெயர் சூட்டப்பட்ட ஆங்கில மருத்துவம், “அறிவியல் பூர்வமாக வளர்ந்தது” என்ற புகழோடு பேசப்படும் மருத்துவ முறைகள், அதைக் கடைப்பிடிக்கும் நவீன மருத்துவர்களின் பரிந்துரைகள் — பரிசோதனைகள், மாத்திரைகள், கட்டுப்பாடுகள் — இவற்றில் எதுவும் மனிதரை நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வைக்க முடியாது.

மாறாக, அந்த மருந்துகளும் பரிசோதனைகளும் நம்மை இயல்பான வாழ்க்கையிலிருந்து விலக்கி, நம்முடைய இதயத்தையும் சுதந்திரத்தையும் பறித்துக்கொள்கின்றன.

உண்மையான நீண்ட ஆயுளின் இரகசியம் மருத்துவக் கட்டுப்பாடுகளில் இல்லை.

இயற்கையைத் தழுவிய வாழ்க்கையில்தான் இருக்கிறது.

கு.நா. மோகன்ராஜ்

மரபு வழி தொடு சிகிச்சையாளர்

Founder of Happy and Healthy Life Solutions