உலக சர்க்கரை நோய் தினம் - நவம்பர் 14

World Diabetes Day - November 14

BLOG

11/14/2025

இன்றைக்கு ஒரு குழு,

“அரிசி சாப்பிடாதே…

மாவு சத்து (கார்போஹைட்ரேட்) தவறு…

சிறுதானியம் கூட சர்க்கரை அதிகரிக்கும்…”

என்று மக்களைப் பயமுறுத்துகிறது.

ஆனால் உண்மையை சிறிது சிந்தனை செய்தாலே தெரியும்:

கம்பு, ராகி, சோளம், கேழ்வரகு, பழைய சோறு போன்ற

முழுக்க மாவு சத்து (கார்போஹைட்ரேட்) உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்த முன்னோர்களுக்கு சர்க்கரை நோய் என்றே இல்லை.

அப்படியிருக்க மாவு சத்து உணவுகள்தான் தவறு என்பது

அறிமுகமற்றதும், அறிவியலற்றதும்,

மக்கள் மனதில் பயம் உண்டாக்கும் தவறான விளம்பரமே.

நோயில்லா வாழ்வின் அடிப்படை விதி — “பசித்துப் புசி”

நம் முன்னோர்கள் சொன்ன ஒரே வரி:

“பசித்துப் புசி — பசி இல்லையேல் புசிக்காதே.”

இது சாத்திரத்தைப் படிக்க வேண்டிய அவசியமே இல்லாத

உடல் இயங்கும் அடிப்படை விதி.

பசி உருவாகும் போது மட்டுமே,

ஜீரண திரவம் உருவாகிறது

குடல் வேலைக்கு தயாராகிறது

கல்லீரல் திறந்து செயல்படுகிறது

உணவு சரியாகச் செரிமானமாகிறது

இதுதான் ஆரோக்கியத்தின் அடித்தளம்.

“நேரத்திற்கு சாப்பிடுங்கள்” என்ற நவீன கோட்பாடு உடலுக்கு மிகப்பெரிய துன்பம்

உடலுக்குப் பசி இல்லாதபோது சாப்பிடும் போதே:

ஜீரண சக்தி குறைகிறது

உணவு உடலில் கெட்டுப்போய் நச்சு படிகிறது

கல்லீரல் சோர்வடைகிறது

கணையம் (Pancreas) அதிக சுமைக்குள் தள்ளப்படுகிறது

உடல் பருமன் அதிகரிக்கிறது

ரத்தச் சர்க்கரை சமநிலை குலைகிறது

இதுவே சர்க்கரை நோய் உருவாகும் முதல் படி.

ஆகவே, உணவை நேரத்துக்கு சாப்பிடுவது அல்ல .

உடல் கேட்கும் போது, பசியான போது மட்டும் சாப்பிடுவது தான் இயற்கை மருத்துவம்.

மாவு சத்து (கார்போஹைட்ரேட்) உணவுகளை குற்றம் சொல்லுவது மிகப்பெரிய தவறு

இன்று “மாவு சத்து ஆபத்து” என்று சொல்லப்படுகிறது.

ஆனால் உண்மை முற்றிலும் எதிர்மறை.

கம்பு–ராகி–சோளம்–அரிசி–கேழ்வரகு

எல்லாம் மாவு உணவுகள்.

இவை உண்டு வாழ்ந்த காலத்தில்:

சர்க்கரை நோய் இல்லை

இருதய நோய் இல்லை

சிறுநீரக நோய் இல்லை

மாவு உணவுகளை விட்ட பிறகே

இந்த நோய்கள் அதிகரித்துள்ளன.

அப்படியிருக்க இவைதான் காரணம் என்று சொல்லுவது

உண்மை புரியாத சிதைந்த கருத்து.

சர்க்கரை நோய் உண்மையில் எப்படி உருவாகிறது?

(உணவு அல்ல — உடலின் செயலிழப்புதான் காரணம்)

சர்க்கரை நோயின் அடிப்படை காரணங்கள்:

1. ஜீரண சக்தி குறைவு

2. கல்லீரல் மாசடைதல்

3. கணையம் (Pancreas) செயலிழப்பு

4. பசி இல்லாமல் சாப்பிடுதல்

5. செயற்கை உணவுகள்

6. மன அழுத்தம்

7. உடல் உழைப்பு குறைவு

இவையே நோயின் மூலக்காரணம்;

மாவு உணவு அல்ல.

பழங்கள் ரத்தச் சர்க்கரையை குறைக்கும் .

ஆனால்…

ரத்தச் சர்க்கரை குறைவது என்பது சர்க்கரை நோய் குணமாகும் அல்ல.

இது மக்களிடையே நிலவும் மிகப்பெரிய தவறான நம்பிக்கை.

ஆம் — பழங்கள் ரத்தச் சர்க்கரையை குறைக்கும்.

ஆனால் — அதனால் சர்க்கரை நோய் குணமாகிவிட்டது என்று அர்த்தமில்லை.

ஏன்?

சர்க்கரை நோய் எஎன்பது கணையம் (Pancreas) செயலிழந்தது அல்ல.

சர்க்கரை குறைவு என்பது எண்ணிக்கை மட்டும் குறைந்தது

இரண்டும் ஒரே ஒன்றல்ல.

உடல் வெப்பம் குறைந்ததாலே காய்ச்சல் குணமாகிவிட்டதா?

இல்லை.

அதேபோல

சர்க்கரை குறைந்ததாலே நோய் குணமானது என்றும் சொல்ல முடியாது.

எண்ணிக்கை சரியாகிவிட்டது என்பது ஆரோக்கியம் கிடைத்துவிட்டது அல்ல.

ஆகவே

சர்க்கரை அளவை குறைப்பது தீர்வு அல்ல;

கணையத்தை (Pancreas) உயிர்ப்பிப்பதே ஒரே தீர்வு.

மருந்துகள் — எண்ணிக்கையை குறைக்கும் கருவி

ஆனால் காரணத்தைக் குணப்படுத்தாது**

ஏராளமான ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன:

சர்க்கரை நோய் மருந்துகள் இருதயத்தைத் தாக்கும்

சிறுநீர்ப்பை புற்றுநோய் அபாயம்

உடல் பருமன் அதிகரிப்பு

என்று.

மருந்துகளால் “எண்ணிக்கை” குறையும்;

அதனால் சர்க்கரை நோயாளி தற்காலிக நிம்மதி பெறுவார்.

ஆனால்…

கணையம் குணமாகாது

நோய் காரணம் சரியாகாது

அதனால் தான் மருந்து நிறுத்தினால் சர்க்கரை மீண்டும் உயரும்.

உடல் தானே மருத்துவர் — அதன் விதிக்கு திரும்பினால் நோய் மறையும்

உடலின் ஒரே விதி:

“பசித்துப் புசி — பசி இல்லையேல் புசிக்காதே.”

இதையே நாம் பின்பற்றத் தொடங்கினால்:

ஜீரணம் மீளும்

கல்லீரல் சுத்தமாகும்

கணையம் (Pancreas) உயிர்ப்பெறும்

இன்சுலின் இயல்பாக சுரக்கும்

உடல் தானாகவே சர்க்கரை சமநிலை செய்கிறது

இதுதான் முன்னோர் வாழ்ந்த வழி.

இதுதான் உண்மையான மரபு மருத்துவம்.

அக்குபங்சர் — கணையத்தை (Pancreas) உயிர்ப்பிக்கும் நிரூபிக்கப்பட்ட வழி

சரியான அக்குபங்சர் சிகிச்சை:

கல்லீரல்

கணையம் (Pancreas)

நரம்புகள்

ஜீரண அமைப்பு

இவற்றை அதன் இயல்புக்கு திரும்பச் செய்கிறது.

இதனால்:

✔ ரத்தச் சர்க்கரை தானாகவே சீராகும்

✔ மருந்து தேவை குறையும் அல்லது நீங்கும்

✔ உடல் உள்ளிருந்து குணமாகும்

✔ சர்க்கரை நோய் வேரோடு குறையும்

கு.நா. மோகன்ராஜ்

மரபு வழி தொடு சிகிச்சையாளர்

Founder of Happy and Healthy Life Solutions

“பசித்துப் புசி” என்ற முன்னோர்களின் வழி நடந்தால் நோயே வராது — சர்க்கரை நோயும் வராது