உலக தடுப்பூசி தினம் - நவம்பர் 10

World Immunization Day - November 10

BLOG

11/10/2025

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10 அன்று உலகம் முழுவதும் உலக தடுப்பூசி தினம் எனக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பல நாடுகள், மருத்துவ நிறுவனங்கள், அரசாங்கங்கள் ஆகியவை தடுப்பூசியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அனைவரும் தடுப்பூசி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன. ஆனால் இதற்குள் நாம் ஒரு நிமிடம் நின்று சிந்திக்க வேண்டிய நேரம் இது. தடுப்பூசி உண்மையில் பாதுகாப்பானதா?

தடுப்பூசி என்பது நோயைத் தடுக்கும் ஒரு கருவி எனச் சொல்லப்பட்டாலும், அதன் பின்னால் நிறைந்திருக்கும் உண்மைகள் பலருக்கும் தெரியாது. பல தடுப்பூசிகளில் உள்ள ரசாயனங்கள், கனிமங்கள், ப்ரிசர்வேட்டிவ்கள் ஆகியவை உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கக்கூடியவை. பெரும்பாலும் தடுப்பூசிகள் புதிய நோயையே உண்டாக்குகிறது. உண்மையில், ஒவ்வொரு தடுப்பூசிக்கும் பின்னாலும் வணிகமும் அரசியலும் மட்டுமே இருக்கிறது.

பல நாடுகளில் தடுப்பூசியால் ஏற்பட்ட பாதிப்புகளை விசாரிப்பதற்கென நீதிமன்றங்களும் சட்டதிட்டங்களும் உள்ளன. அங்கு மருத்துவர்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு அதனால் ஏதேனும் தீவிர விளைவுகள் ஏற்பட்டால், அந்த விளைவுகளுக்கு காரணம் தடுப்பூசியாக இருந்தால் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்வார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும் அது நடக்காது. தடுப்பூசிக்கும் அந்த குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று கூறும் மருத்துவர்கள் நம் நாட்டினர். அதனால் இங்கே தடுப்பூசியின் பாதிப்புகளை விசாரித்து நஷ்ட ஈடு வழங்குவதற்கும் வாய்ப்பில்லை.

மேலும், ஒவ்வொரு தடுப்பூசியும் என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை அந்த தடுப்பூசி நிறுவனங்களே அறிவித்தும் இருக்கிறார்கள் என்ற உண்மை நம் மக்களுக்கு தெரியாது. அந்த தகவல்கள் ஒவ்வொரு தடுப்பூசி பெட்டியிலும் உள்ள துண்டறிக்கையில் (leaflet) தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை அறிந்து கொண்ட மக்கள், அவர்களாகவே தடுப்பூசியை போடுவதற்கு முன்னால், அந்த துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பக்கவிளைவுகளை தங்களுக்கு புரியும் மொழியில் மருத்துவர்களிடம் சொல்லச் சொல்லி கேட்டு, அதன் பிறகு தடுப்பூசி போடுவது பற்றிய முடிவை எடுக்க வேண்டும். இது ஒரு அறிவார்ந்த நாகரிகத்தின் அடையாளமாகும்.

உடல் தன்னுள் ஒரு அதிசய மருத்துவமனையை தாங்கிக் கொண்டிருக்கிறது. அது தானாகவே நோயை எதிர்த்து குணப்படுத்தும் சக்தி கொண்டது. அந்த சக்தியை வளர்ப்பதே உண்மையான தடுப்பூசி. இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை, ஆரோக்கியமான உணவு, தூய நீர், சூரிய ஒளி, மன அமைதி — இவையே நம் உடலின் உண்மையான பாதுகாப்புக் கவசங்கள்.

உலகம் இன்று தடுப்பூசி தினத்தை கொண்டாடும் வேளையில், நாம் உண்மையான ஆரோக்கியத்தின் அர்த்தத்தை மீண்டும் நினைவில் கொள்வோம். பாதுகாப்பான தடுப்பூசி என்பது இதுவரை நீங்கள் போடாத தடுப்பூசி தான் — அதாவது, உடல் தானாக உருவாக்கும் இயற்கை நோயெதிர்ப்பு சக்தியே நம் உண்மையான காவலன்.

உடலே மருத்துவர் — அதனை நம்புவதே உண்மையான தடுப்பூசி.

கு.நா. மோகன்ராஜ்

மரபு வழி தொடு சிகிச்சையாளர்

Founder of Happy and Healthy Life Solutions

“பாதுகாப்பான தடுப்பூசி என்பது இதுவரை நீங்கள் போடாத தடுப்பூசி தான்”