உலக நிமோனியா தினம் - நவம்பர் 12
World Pneumonia Day - November 12
BLOG
11/12/2025


பொதுவாக உடலில் தேங்கிய கழிவுகளை வெளியேற்றும் முயற்சிகளில் ஒன்றுதான் காய்ச்சல், சளி, இருமல் என்று நாம் அறிந்திருக்கிறோம்.
இவை உடலின் எதிரிகளல்ல — நம் உடல் தன்னையே சுத்தப்படுத்திக் கொள்ளும் முயற்சிகள்.
உடலின் ஒவ்வொரு உறுப்பும் தன்னுடைய செயல்பாட்டை சீராக வைத்திருக்க ஒரு இயற்கை சமநிலை அமைப்பை உடையது.
அந்த உறுப்பில் நச்சுகள், அடைப்புகள், தேவையற்ற கழிவுகள் சேரும்போது, அந்த உறுப்பே அவற்றை வெளியேற்ற ஒரு செயல்பாட்டைத் தொடங்குகிறது.
அது வெளிப்படும்போது நாம் அதைக் “நோய்” என்று அழைக்கிறோம்;
ஆனால் உண்மையில் அது “உடல் தன்னைத் தானே சரி செய்யும் செயல்முறை.”
அதேபோல், நுரையீரலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றும் முயற்சியில் ஏற்படும் காய்ச்சலுக்கே நிமோனியா என்று பெயர்.
அது ஒரு “அழற்சி” அல்ல — ஒரு “சுத்திகரிப்பு.”
நுரையீரல் அதன் உள் அடைப்புகளை கரைத்து வெளியேற்றுகிறது;
அந்த சுத்திகரிப்பு செயல்பாட்டின் வெப்பமாகவே நம் உடலில் காய்ச்சல் தோன்றுகிறது.
நிமோனியாவின் அறிகுறிகள் என்று நவீன மருத்துவத்தால் சொல்லப்பட்டவைகள் உடலின் சுத்திகரிப்பு மொழி
நுரையீரல் சுத்தம் செய்யும்போது உடல் வெளியே காட்டும் சில அறிகுறிகள் —
திடீரென உயரும் காய்ச்சல்
சளி மற்றும் இருமல் (மிகவும் ஆழமான இருமல்)
மூச்சுத்திணறல், சுவாசத்தில் வலி
மார்புப் பகுதியில் கனத்த உணர்வு
உடல் வலி, பலவீனம், வியர்வை
சில நேரங்களில் குளிர் அல்லது நடுக்கம்
இவை அனைத்தும் உடல் நுரையீரலில் தேங்கியுள்ள சளி, நச்சுகளை வெளியேற்றும் போது தோன்றும் இயற்கையான அறிகுறிகள்.
அவை ஒடுக்கப்பட வேண்டியவை அல்ல . புரிந்துகொள்ளப்பட வேண்டியவை.
நாம் இதை மருந்துகளால் அடக்கிவிட்டால்,
உடல் போராடும் வாய்ப்பை நாம் பறித்துவிடுகிறோம்.
அதனால், காய்ச்சலைக் குறைக்க அல்ல, உடலைக் குணமாக்க உதவ வேண்டும்.
உடலுக்குத் தேவையான ஓய்வு, வெப்பம், சுத்தமான உணவு, குறிப்பாக காரச் சுவை அதிகம் இருக்கக்கூடிய சூப்பு வகைகள் , பிழிந்தால் சாறு வரக்கூடிய பழங்களான சாத்துக்குடி ,ஆரஞ்சு, அண்ணாசி, திராட்சை போன்றவைகளை சாறாகப் பிழிந்து வெந்நீரில் கலந்து குடிப்பது, வெந்நீர் குடித்தல், ஆழ்ந்த மூச்சு ஆகியவற்றை வழங்கினால் ,
நுரையீரல் தானாகவே சுத்தம் செய்து, உடல் இயல்புநிலைக்கு திரும்பிவிடும்.
காய்ச்சல், சளி, இருமல், நிமோனியா
இவை எல்லாம் உடல் நமக்குச் சொல்வது ஒரே செய்தி
"நான் சுத்தம் செய்ய வருகிறேன்… தயவுசெய்து தடுக்காதே.”
கு.நா. மோகன்ராஜ்
மரபு வழி தொடு சிகிச்சையாளர்
Founder of Happy and Healthy Life Solutions
